செங்குன்றம்,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடுவில் உள்ள பெட்ரோல் பங்கில் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 31), ஊத்துக்கோட்டையை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் (25), சீதஞ்சோஜீயை சேர்ந்த மணிகண்டன் (26), ராமு(34), செல்வன் (24) ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு கள்ளநோட்டை மாற்றியபோது சத்தியவேடு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைப்பு
இந்த வழக்கு ஸ்ரீகாளஹஸ்தி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குருநாதம், கள்ள நோட்டுகளை மாற்றிய குற்றத்துக்காக சீனிவாசன், சுபாஷ்சந்திரபோஸ், மணிகண்டன், ராமு, செல்வன், ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
பின்னர் 5 பேரையும் போலீசார் கடப்பா சிறையில் அடைத்தனர்.