தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டத்தில் 43 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை சிறப்பு சிகிச்சை வார்டில் தனிமைப்படுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில் அவர்களில் பெண்கள் ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
கடந்த வாரம் 20 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அதன் பிறகு மேலும் 13 பேர் கடந்த 24ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் குணமடைந்தனர் அவர்கள் போடியை சேர்ந்த கணவன் மனைவி ஆவார்.
இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் பிஸ்கட் பழங்கள் மற்றும் மருந்துகள் கொடுத்தும் கைதட்டி வாகனத்தில் போடிக்கு அனுப்பி வைத்தனர்..
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 35 பேர் நோயாளிகள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்..
இதன்மூலம் தேனில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.